கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்
ADDED :1848 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி பிரமோற்சவ தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கோவில் கொடிமரம் சேதமானதால் அகற்றப்பட்டு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், தங்க கொடிமரம் தயாராகி வருகிறது. இதனால் ஆகம விதியை பின்பற்றி, தற்காலிக கொடிமரம் பிரதிஷ்டை செய்து, நேற்று கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கருடாழ்வர் கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, பட்டாச்சாரியார்கள் ஸ்ரீராம், பாலாஜி கொடியேற்றினர். இதையடுத்து திருத்தேர் தயார் செய்யும் பணிக்கு முகூர்த்த கால் போடப்பட்டது. கோவில் செயல் அலுவலர் கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.