பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் காளத்தீஸ்வரர் கோவிலில் வராகி ஜபம்
ADDED :1884 days ago
புதுச்சேரி: கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி, புதுச்சேரி, காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் வராகி ஜபம் நடந்தது. சென்னை அம்பத்துார், ஸ்ரீ யோக மாயா புவனேஸ்வரி பீடத்தின், பரத்வாஜ் சுவாமிகள் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகி பாஸ்கர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி, பர த்வாஜ் சுவாமிகள் தலைமையில் வராகி ஜபம் நடந்தது. பின்னர் அவர், பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். இன்று காலை 10:00 மணிக்கு கோவிலுக்கு வரும் பரத்வாஜ் சுவாமிகள், பொதுமக்களுக்கு ஆசி வழங்கிய பின் சென்னை செல்கிறார்.