உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவபாண்டலத்தில் கொரோனா தாக்கம் குறைய யாக பூஜை

தேவபாண்டலத்தில் கொரோனா தாக்கம் குறைய யாக பூஜை

 சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் கொரோனா தாக்கம் குறைய யாக பூஜை நடந்தது.தமிழகம் உள்ளிட்ட இந்தியா, மற்றும் உலகமெங்கும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

உலகமெங்கும் கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் நலமுடன் வாழ சங்கராபுரம் வட்ட பிராமணர் சங்கம் சார்பில் தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் மிருத்யுஞ்ச மற்றும் தன்வந்தரி ேஹாமம் நடந்தது. பிராமணர் சங்க வட்ட தலைவர் ரவி குருக்கள் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ராஜப்பா, சூரியநாராயணன், கணபதி முன்னிலை வகித்தனர்.பொருளாளர் மகாதேவன் வரவேற்றார்.யாக பூஜையை ஆதிசைவர்கள் நலவாழ்வு மைய நிறுவன தலைவர் தில்லை கார்த்திகேய சிவம் தலைமையில் ஜெயமுருகன் குருக்கள்,அரிகர குருக்கள்,விஸ்வநாத குருக்கள், பரணிதர ஐயர்,ரஜனிகாந்த் குருக்கள்,  தேவராஜ குருக்கள், விக்னேஸ்வர முர்த்தி ஆகியோர் முன்னிலையில் மிருத்யுஞ்ச ேஹாமம், தன்வந்திரி ேஹாம் நடந்தது.நிகழ்ச்சியில் பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், ரோட்டரி தலைவர் சுதாகரன், ஓதுவார் அருள் பங்கேற்றனர். மகா தீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவரும் முக கவசம் அணிந்து சமுக இடைவெளியை கடைபிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !