ஆதிசைவ அர்ச்சகர் அறக்கட்டளைக்கு நிர்வாகிகள் தேர்வு
ADDED :1933 days ago
சென்னிமலை: சென்னி மலை, ஆதிசைவ அர்ச்சகர் அறக்கட்டளைக்கு, நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். சென்னிமலை ஆதி சைவ அர்ச்சகர் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் நிர்வாக குழு தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் ஏகமனதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அறக்கட்டளை புதிய தலைவராக மதி குருக்கள், செயலாளராக ராஜப்பா குருக்கள், பொருளாளராக ராஜசேகர் குருக்கள், தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் தலைவர் தபராஜ் குருக்கள், நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிர்வாகிகளுக்கு, சென்னிமலை முருகன் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியர் உட்பட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.