/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் ஆக்ஸிஜனை அதிகரிக்க கூடுதலாக 2 மோட்டார்கள்
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் ஆக்ஸிஜனை அதிகரிக்க கூடுதலாக 2 மோட்டார்கள்
ADDED :1833 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் நுாற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்ததையடுத்து நீரில் ஆக்ஸிஜனை அதிகரிக்க கூடுதலாக 2 மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. மழை பெய்தால் மட்டுமே இப்பொய்கை நிரம்பும். நீர் வெளியேற வழியில்லை. அப்பகுதியினர் பொய்கையில் துவைக்க, குளிக்க செய்கின்றனர். சோப், ஷாம்பு, காலி பாக்கெட்டுகள், பழைய துணிகளை தண்ணீருக்குள் விட்டு செல்கின்றனர். இதனால் பொய்கை நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசியது. நீரில் ஆக்ஸிஜனை அதிகரிக்க 2 ஆண்டுகளாக மின்மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நுாற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் கூடுதலாக ஒரு ஆயில் மோட்டார் பயன்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 ஆயில் மோட்டார்கள் மூலம் நீர் துாய்மைப்படுத்தப்படுகிறது.