சங்கடஹர சதுர்த்தி விழா: விநாயகர் கோவிலில் பூஜை
ADDED :1990 days ago
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலைவிநாயகர் கோவிலில், சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி?ஷகம் நடந்தது. மூல விநாயகருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேரகணபதி கோவில், கடைவீதி செல்வ கணபதி விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.