மருதுார் வள்ளலார் அவதார இல்லத்தில் சிறப்பு வழிபாடு
ADDED :1827 days ago
புவனகிரி : புவனகிரி தாலுகா மருதுாரில் வள்ளலாரின் 198வது ஜெயந்தி விழா நடந்தது.
புவனகிரி தாலுகா மருதுாரில் பிறந்த வள்ளலாரின் 198வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரத் துவங்கினர். தியானம் செய்து அகவற்பா ஓதினர். மலரால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் பக்தர்கள் மலர் மற்றும் காணிக்கை செலுத்தினர். காலையில் இருந்து இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.