வள்ளலார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED :1930 days ago
புதுச்சேரி : வள்ளலார் பிறந்த நாளையொட்டி அகில இந்திய வள்ளலார் மன்றம் சார்பில் திருக்கனுார் கடை வீதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காங்.,சிறப்பு அழைப்பாளர் முத்தழகன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் வள்ளலார் மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், ஜானகிராமன், பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சளி, காய்ச்சல், சுவையின்மை அறிகுறி இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.