வடகுமரையில் வள்ளலார் பிறந்தநாள் ஜோதி தரிசனம்
ADDED :2046 days ago
தலைவாசல்: வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி, தலைவாசல், வடகுமரையில் உள்ள, சத்திய ஞான சபையில், நேற்று காலை, திருவருட்பா அகவல் பாராயணம் நடந்தது. சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஏழு திரைகள் விலக்கி, ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதேபோல், ஆத்தூர், கோட்டை அருட்பெருஞ்ஜோதி சார்பில், மகா மந்திரம் முழங்க சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனை முன், 500க்கும் மேற்பட்டோருக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.