உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

நத்தம் கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் மே 21 கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.இதில் மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்,தீபாராதனைகளுக்கு பின் முகூர்த்தக்கால் கோவில் முன்பாக நடப்பட்டது. தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் கோவில் அறங்காவலர் சிவலிங்கம், உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் குருக்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !