உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயண குருகுலத்தின் 102வது ஆண்டு விழா உலகளாவிய அமைதியை வலியுறுத்தி பிரார்த்தனை

நாராயண குருகுலத்தின் 102வது ஆண்டு விழா உலகளாவிய அமைதியை வலியுறுத்தி பிரார்த்தனை

ஊட்டி: ஊட்டி நாராயண குருகுலத்தின், 102 வது ஆண்டு விழா, குரு நித்திய சைதன்யயதியின், 27ம் ஆண்டு மகா சமாதி நாள் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கூட்டு பிரார்த்தனை, ஹோமம் நடந்தது. தொடர்ந்து, குருகுல தலைவர் சுவாமி தியாகேஷ்வரன் தலைமை வகித்து பேசுகையில்,‘‘நாராயண குருவின் ஆன்மிக பயணத்தில், உலகளாவிய அமைதி, பேரன்பு, சகோதரத்துவம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன. இதனை அனைவருக்கும் எடுத்து செல்லும் பணி தொடர்ந்து செயல்படும்,’’ என்றார்.


தத்துவஞானி சுதீர் குல்கர்னி பேசுகையில்,‘ஆதி சங்கராச்சாரியாரின் தத்வார்த்தங்கள், நம் நாட்டின் ஆன்மிக அறிவின் மிக முக்கிய மாற்றங்களை உருவாக்கியது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்,’’ என்றார்.


இஸ்லாமிய துறவி சூபி பேசுகையில், ‘‘இஸ்லாமிய ஆன்மிக ஆழமான கருத்துகளை குரு நித்திய சைதன்யாயின் பார்வையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். அவரின் தத்துவார்த்தங்கள் மக்களிடையே முக்கியம் பெற்று வருகிறது,’’ என்றார். ‘மானஸ்’ அமைப்பின் நிறுவனர் சிவதாஸ் பேசுகையில்,‘‘உலகளாவிய அமைதியான வாழ்விற்கும், நம் நாட்டின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் இடமாக ஊட்டி குருகுலம் விளங்குகிறது. இதனால், தத்துவஞானிகள், இசை கலைஞர்கள், நடன கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொண்டாடும் இடமாக குருகுலம் மாறி உள்ளது. நடராஜ குரு மற்றும் நித்திய சைதன்யயதியின் தத்துவ நுால்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள் வாயிலாக கொண்டு செல்வதன் வாயிலாக, சிந்தனைகளில் சிறந்த மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது,’’ என்றார். நிகச்சியில் சோனா, மோகினி ஆகியோரின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. சுவாமி வியாசபிரசாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை சுவாமினி கார்கி காயத்ரி, கிரி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !