உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகசக்தி அம்மன் கோவிலுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்

நாகசக்தி அம்மன் கோவிலுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: நாகசக்தி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம், சிதம்பரம் சாலையில் உள்ள நாகசக்தி அம்மன் கோவிலில், 29ம் ஆண்டு சித்திரை செடல் திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக இன்று காலை செடல் உற்சவத்தை முன்னிட்டு மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாகசக்தி அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !