உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை

கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை

கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே கோபால்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் உலக நன்மை வேண்டி குத்து விளக்கு பூஜை நடந்தது.

கோபால்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.இதனை முன்னிட்டு நேற்று காளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், சிறுமிகள் குத்துவிளக்குகளுடன் கலந்து கொண்டு அம்மன் பக்தி பாடல்களை பாடியும், மந்திரங்களை ஓதியும் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபமேற்றி பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !