உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்: காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த, திம்மையன்பேட்டை கிராமத்தில், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு மே 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இன்று காலை 8:00 மணிக் கலசப் புறப்பாடு மற்றும் 8:15 மணிக்கு கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !