விஜயவாடா துர்கை அம்மன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு!
ADDED :5 minutes ago
ஆந்திர மாநிலம் விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் உள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 8 வரை கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதையொட்டி தினமும் மூன்று வேளைகளில் அபிஷேகம், வில்வார்ச்சனை, லிங்கார்ச்சனை மற்றும் மாலை 7 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். நவம்பர் 13ம் தேதி நாகுல சவிதியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு தீபோத்ஸவமும் நடைபெறும். நவம்பர் 24ம் தேதி கார்த்திகை பௌர்ணமியன்று மாலை 6.30 மணிக்கு கோடி தீபோத்ஸவமும், இரவு 7 மணிக்கு ஜ்வாலா தோரணமும் நடைபெற உள்ளன. சிறப்பு வில்வார்ச்சனை உள்ளிட்ட வழிபாடுகளும், அன்னதானமும் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் இந்த சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று இறையருள் பெறுமாறு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.