திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் 24ம் தேதி மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் 24ம் தேதி மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை மகாதீப திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது. அன்று 2, 668 உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும் மஹா தீபத்தை பக்தர்கள் மலை மீது ஏறி தரிசிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மலை ஏற பக்த்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.