அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ விழா
ADDED :1 minutes ago
அன்னூர்: கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ விழா நடந்தது.
பழமையான அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கோவிலில் தினமும் பூஜைகளில் ஏற்படும் குறைகளை போக்குவதற்காகவும், நான்கு நாள் பவித்ர உற்சவ விழா கடந்த 2ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நேற்று காலை புண்யா வாசனமும், ரக்சாபந்தனமும் நடந்தது. மாலையில் நித்திய ஆராதனம் நடந்தது. இன்று சாற்றுமுறை மற்றும் திருவாராதன ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை காலை 9:00 மணிக்கு ஹோமமும், மதியம் சாற்றுமுறை, கும்ப்ரோசனமும் நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்துடன் பவித்ர உற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் பங்கேற்க கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.