உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு சிறப்பு வேள்வி பூஜை

விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு சிறப்பு வேள்வி பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, ஆதிபராசக்தி கோவிலில் 18 ம் ஆண்டு விழா மற்றும் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.


விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் ஆதிபராசக்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சக்தி பீடத்தில் நேற்று முன்தினம் உலக சமாதானம் வேண்டியும், மழைவளம் பெருகவும், இயற்கை பேரிடர்களை தவிர்க்கவும் வேண்டி சிறப்பு வேள்வி பூஜைகள் மற்றும் ேஹாமங்கள் நடைபெற்றது. பக்தர்கள் கலசங்களை ஏந்தியபடி கோவில் வளாகத்தை சுற்றி வந்து சுவாமியை வழிபட்டனர். பின், பக்தர்களின் கைகளால் அம்மனுக்கு புனிதநீர் அபிேஷகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இறுதியாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை , மாவட்ட தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !