உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துசுவாமி தீட்சிதரின் 250வது பிறந்த நாள்: வாரணாசியில் சிறப்பு நாணயம் வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

முத்துசுவாமி தீட்சிதரின் 250வது பிறந்த நாள்: வாரணாசியில் சிறப்பு நாணயம் வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வாரணாசி: கர்நாடக இசையில் புகழ்பெற்ற, கற்கண்டைப் போல் பக்தியில் கரைந்த உள்ளத்தில் இருந்து இனிக்க இனிக்க இசை பாடிய முத்துசுவாமி தீட்சிதரின் கீர்த்தனைகள் இசை உலகத்தின் அற்புதச் சொத்து. அனைவரது நெஞ்சிலும் தேவாமிர்தமாக நிலைத்து தெய்வாம்சமான அந்த மகானின் 250வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு நினைவு நாணயத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாரணாசியில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், காசிக்கும் தென்னிந்திய பாரம்பரிய செவ்வியல் இசைக்கும் இடையே நிலவும் ஆழமான கலாசார மற்றும் ஆன்மிகத் தொடர்புகளை எடுத்துரைத்தார். மேலும், முத்துசுவாமி தீட்சிதருக்கு வாரணாசியுடன் இருந்த தொடர்பையும், அங்குள்ள அன்னபூரணி அம்மன், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது அவர் இயற்றிய பக்திப் பாடல்களையும் நினைவுகூர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !