உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியளித்த பக்தர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் நன்றி. தீபாவளி வாழ்த்து!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியளித்த பக்தர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் நன்றி. தீபாவளி வாழ்த்து!

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் தீபாவளி வாழ்த்துகளும் நன்றிக் கடிதங்களும் அனுப்பப்படுகின்றன.


அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் வாட்ஸ்அப் மூலம் தீபாவளி வாழ்த்துகளும் நன்றிக் கடிதங்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் செய்திகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்து சில பக்தர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். இந்நிலையில், அந்த வாழ்த்துச் செய்திகளும் கடிதங்களும் அறக்கட்டளையால் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படுபவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களைப் பதிவு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு donor.srjbtkshetra.org எனத் தொடங்கும் என்று அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !