உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மசினி அம்மன் கோவில் காளை உயிரிழப்பு அஞ்சலி செலுத்திய பக்தர்கள்

மசினி அம்மன் கோவில் காளை உயிரிழப்பு அஞ்சலி செலுத்திய பக்தர்கள்

கூடலுார்: மசினகுடி பகுதியில், 20 ஆண்டுகளாக உலா வந்த மசினி அம்மன் கோவில் காளை உயிரிழந்ததால், உள்ளூர் மக்கள் சோகமடைந்தனர்.


மசினகுடியில் உள்ள பழமையான மசினி அம்மன் கோவிலுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஊர் மக்கள் சார்பில் ஆண் கன்று குட்டி வழங்கப்பட்டது. இந்த கோவில் காளை பகல் நேரங்களில் மசினகுடி பகுதியில் உலா வருவதுடன், இரவு நேரங்களில் கோவில் உள்ளிட்ட சில பகுதிகளில் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. முக்கிய நாட்களில் இந்த காளை பக்தர்களோடு கோவில் வளாகத்தில் இருக்கும். இதனை ெபரும் பக்தியுடன் வழிபடுவர். இந்த காளை இதுவரை மக்களுக்கு இடையூறுகளும் ஏற்படுத்தவில்லை. இந்த கோவில் காளை, வயது முதிர்வு காரணமாக நேற்று அதிகாலை மசினகுடி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உயிரிழந்தது. கோவில் கமிட்டியினர், பக்தர்கள் காளையின் உடலை மீட்டு மசினி அம்மன் கோவில் வளாகத்துக்குள் எடுத்து சென்று, மலர் மாலைகளால் அலங்கரித்து, அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சடங்குகளை முடித்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று சிவன் கோவில் அருகே நல்லடக்கம் செய்தனர். இதன், உயிரிழப்பு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !