கம்பர் வழிபட்ட துர்கை காளியம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை
ADDED :12 minutes ago
விழுப்புரம்: சின்னசெவலை கம்பர் வழிபட்ட துர்கை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை கிராமத்தில் கம்பர் வழிப்பட்ட துர்கை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, காளியம்மன் நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் எட்டு கரங்களோடு பலகைக் கல்லில் உருவான புடைப்பு சிற்பமாக காட்சி தருகிறார். இக்கோவிலில் நேற்று ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, மாலை 4:00 மணிக்கு காளியம்மனுக்கு பால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.