ரெங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :4 hours ago
தேவகோட்டை: தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோயில் பிருஹ்மோற்சவ திருவிழா 5 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஆறாம் நாள் திருக்கல்யாணம் நடந்தது. தினமும் மகாலட்சுமி தாயாருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. 10 ம் நாளான நேற்று காலை ரெங்கநாதர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார் தேருக்கு எழுந்தருளினர். மாலையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.