உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை: நந்தியம் பெருமானுக்கு மகா அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை: நந்தியம் பெருமானுக்கு மகா அபிஷேகம்

தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கு பால் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.


உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். சித்திரை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட திரவியங்களால் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பெருவுடையார் மற்றும் மகா நந்தியம்பெருமானுக்கு நடந்த பல்வேறு அபிஷேகங்களை  நீண்ட வரிசையில் காத்திருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !