உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மாணி செட்டிபாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

செம்மாணி செட்டிபாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

அன்னூர்: செம்மாணி செட்டிபாளையம், மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


செம்மாணி செட்டிபாளையத்தில் உள்ள பழமையான மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த, 11ம் தேதி விநாயகர் பொங்கல் உடன் துவங்கியது. அன்று இரவு அம்மன் அழைத்தலும், காப்பு கட்டுதலும், அம்மனுக்கு அணிகலன் எடுத்து வருதலும், கரகம் ஜோடித்தலும் நடந்தது. கடந்த, 12ம் தேதி அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு பூங்கரகம் எடுத்து வருதலும், காலையில் அக்னி கரகம் எடுத்தலும், மாலையில் மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை பூசாரி மறுகரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் அம்மனை தீர்த்த கங்கையில் இடும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டும், இரவு நடன நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !