ஆதிமூலத்திற்கு பிராமணர் சங்கம் வாழ்த்து
ADDED :1825 days ago
சென்னை; பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தின் தலைசிறந்த, தினமலர் நாளிதழ், மக்கள் சேவையில், 70 ஆண்டுகளை பூர்த்தி செய்து, நாட்டு நலனில் அக்கறையுடன் விளங்குகிறது.
அதற்கு, சங்கத்தின் சார்பில், மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.மேலும், தினமலர் நாளிதழின் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிலும் சிரத்தையுடன், ஆர்வத்துடன் ஈடுபடும் அவருக்கு, இந்த, ஐ.என்.எஸ்., தலைவர் பதவி மிகவும் தகுதியானது. அவருக்கும், சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.