வாஸ்து என்றால் என்ன?
ADDED :1836 days ago
வாஸ்து என்றால் வசிக்கும் இடம். தமிழில் மனையடி என்று குறிப்பிடுவர். நாம் வசிக்கும் இடத்தை இத்தனை அடி நீளம், அகலத்தில் அமைத்துக் கொள்ளும் அளவைக் கூறுவதே மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரம். ஒரு அரக்கன் தன் பசியைப் போக்கிக் கொள்ள இந்த உலகையே விழுங்க முற்பட்டான் என்றும், அவனுக்கு வீரபத்திரர் ஒரு பூசணிக்காயை கொடுத்தருளி பசியைப் போக்கினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பசி நீங்கிய அந்த அரக்கன் பூமி முழுவதும் பரந்து விரிந்து படுத்து உறங்குவதால், அவனது உடலே நாம் வசிக்கும் பூமியாகி விட்டது. எனவே, அவன் வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுகிறான். மனை முகூர்த்தம் செய்யும் போது, வாஸ்து புருஷனுக்குபூசணிக்காய் பலியிடுவார்கள். மனைக்கான வரைபடம் தயாரிக்கும்போது, மனையடி சாஸ்திரப்படி தயார் செய்கிறார்கள்.