உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தேவநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கனுார்; கூனிச்சம்பட்டு தேவநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு, தேவநாத பெருமாள் சுவாமிக்கு, மகா சுதர்சன ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத பெருமாள் சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர், தேவநாத பெருமாள் பஜனை குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !