பாடகர் எஸ்.பிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம்
ADDED :1932 days ago
திருவண்ணாமலை: மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, பின்னணி பாடகர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றினர். சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கடந்த, 25ல் மறைந்தார். இவரது உடல் மறுநாள், சென்னை தாமரைப்பாக்கத்தில் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், இரண்டாம் பிரகாரத்தில் சர விளக்கு பகுதியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி, அருணாசலேஸ்வரரை வேண்டி பாடல்கள் பாடினர். இதில், கலெக்டர் கந்தசாமி, சினிமா பின்னணி பாடகர்கள் மனோ, எஸ்.பி. ஜைலஷா, அனுராதா ஸ்ரீராம், நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.