மாரியம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் ரூபாய் நோட்டு காப்பு அலங்காரம்
ADDED :1826 days ago
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன்நகர் துள்ளுமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு ரூ.14 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் ரூபாய் நோட்டு காப்பு அலங்கரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.இக்கோயில் பொங்கல் விழா அக்.,6ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடக்கிறது. நேற்று புரட்டாசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டு காப்பு அலங்காரம் செய்ய பக்தர்கள் ரூ.10, 20, 50, 100, 200, 5000, 2000 என ரூ.14 லட்சத்து 29 ஆயிரம் வழங்கினர். அந்நோட்டுக்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின் பக்தர்களுக்கு அவரவர் வழங்கிய ரூபாய் நோட்டுக்கள் திருப்பி வழங்கப்பட்டது. அதை பக்தர்கள் அம்மன் மூலம் வீட்டில் மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வதாக கருதி பூஜித்தனர்.