உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் தேர்பவனி

துாய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் தேர்பவனி

 ராமநாதபுரம் : ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள புனித துாய ஜெபமாலை அன்னை ஆலய விழாவில்நேற்று தேர்பவனி நடந்தது. இங்கு அக்.,2ல் கொடியேற்றம் நடந்தது. தினமும் நவநாள் திருப்பலி ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ( அக்.,10ல்) ஆலய வளாகத்திற்குள் தேர்பவனி நடந்தது. இன்று (அக்.,11ல்) காலையில் புதுநன்மை திருப்பலியும், மாலையில் நிறைவு திருப்பலி மற்றும் கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாதிரியார்கள் அருள் ஆனந்த், உலகமீட்பர் ஆலயம் சிங்கராயர், ஸ்டான்லி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !