ராம பக்த ஆஞ்சநேயரும் சிறப்பு பூஜை
ADDED :1828 days ago
சூலூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் வட்டார பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சூலூர் பெருமாள் கோவிலில் நடந்த பூஜையில் பெருமாளும், கரவழி மாதப்பூர் கோவிலில் ராம பக்த ஆஞ்சநேயரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கருமத்தம்பட்டி அடுத்த ராயர் பாளையம் லட்சுமி நாராயணர், பக்த ஆஞ்சநேயர் கோவிலில் பஜனை மற்றும் பிருந்தாவன் ஆட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.