தருமபுரம் 26வது ஆதீனம் உருவப்படம் திறப்பு
ADDED :1828 days ago
விருத்தாசலம்; விருத்தாசலம் தேவாரப்பாட சாலையில் பயின்ற முன்னாள் மாணவர், தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச் சாரிய சுவாமிகளின் உருவப்பட திறப்பு விழா நடந்தது.ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த், தொழுதுார் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லுாரி தாளாளர் ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். தேவார பாட சாலை நிறுவனர் ரத்தினசபாநாதன் வரவேற்றார். தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் படத்தை திறந்து வைத்து, அருளாசி வழங்கினார். ஞானசம்பந்தர் பள்ளி தாளாளர் ரத்தினஅருணாசலம், நால்வர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஆதித்யன் உட்பட பலர் உடனிருந்தனர். விருத்தாசலம் நால்வர் கல்வி அறக்கட்டளையின், தொழில்நுட்ப பயிற்சி மையத்தை ஆதீனம் துவக்கி வைத்தார்.