சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம்!
ADDED :5223 days ago
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு தினமும் உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து இரவு சாமி வீதியுலா நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு உற்சவத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான பெரிய திருவடி எனப்படும் கருட சேவை நடந்தது. கருட வாகனத்தில் ரங்கநாதர் எழுந்தருளி சாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 9.15 மணிக்கு திருத் தேர் உற்சவம் நடக்க உள்ளது.