16ல் பத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனம் ரத்து
ADDED :1861 days ago
மேச்சேரி: வரும், 16ல், அமாவாசையில், பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவிலுக்கு, மாதந்தோறும் அமாவாசையில், மாநிலம் முழுதும் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். வரும் அமாவாசையான, 16ல், கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. இதனால், கொரோனா தொற்று பரவக்கூடும் என்பதால், அன்று, பத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மேட்டூர் சப்–கலெக்டர் சரவணன் பிறப்பித்துள்ளார்.