திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :1918 days ago
தி.மலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம் பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்டவற்றிற்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை.