நாமக்கல் முத்து மாரியம்மன் நவராத்திரி விழா 17ல் துவக்கம்
ADDED :1921 days ago
நாமக்கல்: நாமக்கல் முத்துமாரியம்மன் கோவிலில், வரும், 17ல் நவராத்திரி விழா தொடங்குகிறது. நாமக்கல், பொன்விழா நகரில், கற்பக விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், கோவில் வளாகத்தில் உள்ள துர்கா பரமேஸ்வரி, முத்துமாரியம்மனுக்கு வரும், 17 முதல், 26 வரை நவராத்திரி பூஜை நடைபெறுகிறது. 17 காலை, 7:30 மணிக்கு கணபதி பூஜை, புண்யாகம், கலச ஆவாஹனம், ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், சிறப்பு அபிஷேகம், காலை, 9:30 மணிக்கு ஸகஸ்ரநாம அர்ச்சனை, மஹா தீபாரதனை நடக்கிறது. பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.