உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாத்தம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

ஏகாத்தம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

 கடம்பத்துார் : கடம்பத்துார், ஏகாத்தம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துார் பகுதியில் உள்ளது ஏகாத்தம்மன் கோவில். இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி மகோற்சவம் நடந்து வருகிறது.இந்த ஆண்டு, நவராத்திரி மகோற்சவம், நேற்று முன்தினம் துவங்கி, வரும், 27-ம் தேதி வரை, நடைபெற உள்ளது.தினமும், காலை 11:00 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 8:00 மணிக்கு, சிறப்பு துாபதீப ஆராதனையும் நடைபெறும். ஏகாத்தம்மன் ஆலய சிலம்பு குழுவினரால், சிலம்பாட்டமும், கரகாட்டமும் நடைபெறும்.நவராத்திரி திருவிழாவில், பல வகையான அலங்காரத்தில், மூலவர் மற்றும் உற்சவர் அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !