கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் குருபூஜை
ADDED :1811 days ago
கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகளுடன் இன்று (அக். 21ல்) குருபூஜை நடக்கிறது. இங்கு மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
சுவாமியின் மகாசமாதி தினமான ஐப்பசி மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெறும். இந்தாண்டுத் திருவிழா நேற்று துவங்கியது.வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த சாதுக்கள் பலர் குவிந்தனர். முன்னதாக திரளான பக்தர்கள், மாலையணிந்து விரதமிருந்து வந்தனர். சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை பகுதிகளில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டது. நேற்று தீர்த்த, பால் கலசங்களுடன் மூலவருக்கு தீர்த்தாபிேஷகம் நடந்தது. இன்று உலக நன்மைக்கான யாகம், யாக தீர்த்தாபிேஷகம், 1008 படி பாலாபிேஷகத்துடன் பூஜை நடக்கிறது.