அலைகடல் ஓரத்திலே...
ADDED :1914 days ago
சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் அஷ்ட லட்சுமி கோயில் உள்ளது.
காஞ்சிப் பெரியவருக்கு அஷ்டலட்சுமிகளையும் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்ப வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இதை பக்தர்களிடம் தெரிவிக்க, அவர்கள் அதற்குரிய இடத்தை தேர்வு செய்து கோயில் கட்டினர். தேவர்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது மகாலடசுமி அதில் வெளிப்பட்டாள். இதன் அடிப்படையில் வங்கக்கடலை பாற்கடலாக கருதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயில் உருவானது. சமுத்திர புஷ்கரிணி என அழைக்கப்படும் வங்கக்ககடலே இங்கு தீ்ரத்தமாக உள்ளது.