உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2500 ஆண்டு முந்தைய குத்துக்கல்: தொல்லியல் ஆய்வாளர் தகவல்

2500 ஆண்டு முந்தைய குத்துக்கல்: தொல்லியல் ஆய்வாளர் தகவல்

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன் கோவில் அருகே வத்திராயிருப்பு ரோட்டிலிருந்து குன்னுார் செல்லும் வழியில் உள்ள முனியாண்டி கோயிலின் குத்துக்கல் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ராஜபாளையம் தொல்லியல் ஆய்வாளர் கந்தசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சங்க இலக்கியங்களில் குத்துக்கல் பற்றிய குறிப்புகளின்படி இக்கோயில் குத்துக்கல் 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த குழுத்தலைவருக்கு மரியாதை செய்யும் வகையில் நினைவு கற்களாக எழுப்பபட்டது. இதை 40 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு முனியாண்டி, முனீஸ்வரன், முனீஸ்வரி என பெயரிட்டு மொட்டையடித்து சைவ மற்றும் அசைவ படையல் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இதுபோல் கிருஷ்ணன்கோவில், குன்னுார் பகுதிகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகள் அதிகம் காணப்படுகிறது. தொல்லியல் இடங்களை பாதுகாக்க மாணவர்களும், இளைஞர்களும் முன்வரவேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !