துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :1848 days ago
சங்கராபுரம்: தேவபாண்டலம் துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் ஏரிகரையில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி தினமும், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை சகசரநாம அர்ச்சனை நடக்கிறது. நேற்று நடந்த 5ம் நாள் நிகழ்ச்சியில் அம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.