பொள்ளாச்சி கோவிலில் நவராத்திரி வழிபாடு
ADDED :1809 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நேற்று அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.