மகா சமாதி தினம்: தங்க கவசத்தில் சாய்பாபா அருள்பாலிப்பு
ADDED :1854 days ago
புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த பிள்ளைச் சாவடியில் உள்ள ஸ்ரீ கமல சாய்பாபா கோயிலில் 102வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிபாட்டில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.