அங்காளம்மன் கோவிலில் ஆயுத பூஜை விழா
ADDED :1807 days ago
புதுச்சேரி: அங்காளம்மன் கோவிலில் இன்று மாலை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி, சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் பிரசித்திப் பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 26 நாட்கள் நடக்கும் நவராத்திரி பெருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.