உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசாரா விழா மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி

தசாரா விழா மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி

கூடலூர்: மசினகுடி, மசினியம்மன் கோயிலில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தசரா கொலு திருவிழா 16ம் தேதி துவங்கியது. இதற்காக மாயார் சிக்கம்மன் கோவிலிருந்து, சிக்கம்மனை பழங்குடி மக்கள் ஊர்வலமாக, மசியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து 17ம் தேதி மசியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலகாரத்துடன் கொலு வைத்து, தசரா பூஜை விழா துவக்கியது. கடைசி நாளில் நடந்த விழாவில் மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்கள் அம்மன்களை தரிசித்து சென்றனர். மாலை வரை சிறப்பு பூஜை நடந்தது. கோயில் கமிட்டியினர் கூறுகையில், அரசு அறிவித்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றி பூஜைகள் நடந்தது என, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !