உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆயுதபூஜையையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கடந்த, அக்., 17ம் தேதி, விநாயகர், முருகன், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் அடங்கிய கொலு வைக்கப்பட்டது. நாள் தோறும், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. ஆயுதபூஜை விழாவையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் வரத்துவங்கினார். உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விடுமுறை தினம் என்பதாலும், ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து, சுவாமியை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !