மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1801 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1801 days ago
பந்தலூர்: பந்தலூர் அருகே அய்யங்தகொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நேற்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் அன்பரசி வரவேற்றார். பள்ளி தாளாளர் சுரேந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். சுவாமிகள் ஓம்காரனந்தா சிறப்பு பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்தி குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். நிகழ்ச்சியில் அய்யங்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர். பி. டி. ஏ. தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.
1801 days ago
1801 days ago