விஜய தசமி விழாவில் வித்யாரம்பம்
ADDED :1850 days ago
சூலூர்: விஜய தசமியை ஒட்டி, கோவில் களில் வித்யாரம்ப நிகழச்சி நடந்தது. நவராத்திரியின் 10 வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் வித்யாரம்பம் எனும் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் துவக்கி வைக்கப்பட்டது. சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் நடந்த பூஜையில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். குழந்தைகளின் நாக்கில் ஓம் என எழுதியும், அரிசியில் அச்சரங்களை எழுதி வழிபாடுகள் நடத்தினர். இதேபோல், சூலூர் சிவன் கோவில், கணபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வித்யாரம்ப பூஜைகள் நடந்தன.