விருதுநகர் சிவன் கோயிலில் அம்பு எய்தல்
ADDED :1922 days ago
விருதுநகர் : விஜயதசமியை தொடர்ந்து விருதுநகர் சிவன் கோயில் வளாகத்தில் அம்பு எய்தல் நடந்தது. நவராத்திரி விழாவை தொடர்ந்து விஜயதசமியில் விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி மதுரை ரோடு கே.வி.எஸ்., பள்ளி அருகே உள்ள நந்தவனத்தில் சந்திரசேகரராக அவதாரம் எடுத்து மக்களின் நலன் காக்க அரக்கனை அழிக்க அம்பு எய்யும் நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு கொரோனாவால் சிவன் கோயில் வளாகத்தில் நடந்தது. பாலாஜி பட்டர் அரக்கன் மீது அம்பு எய்ய சுவாமி சந்திரசேகரர் ரூபமாக காட்சி அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசித்தனர்.